திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:12 IST)

முதல்வர் மம்தாவை சந்திக்கும் கமல்ஹாசன்

அரசியல் கட்சி துவங்கவுள்ள நடிகர் கமல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு கொல்கத்தாவில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்ற பிறகு கமல்ஹாசன் மம்தாவை சந்திக்கிறார்.

 
நடிகர் கமல் அரசியல் கட்சி துவங்குவது உறுதியாகியுள்ளது. இதன் முன்னோட்டமாக கடந்த 7ஆம் தேதி புதிய செயலியை சென்னை தி.நகரில் நற்பணிமன்ற உறுப்பினா்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். சமூகத்தில் நடைபெறக்கூடிய பிரச்சினைகள் தொடா்பாக அனைவரிடமும் விவாதிக்க இந்த செயலி பயன்படும் என்று தெரிவித்திருந்தார். அது  #maiamwhistle, #theditheerpomvaa #virtouscycles #kh என்ற ஹேஷ்டேக்கில் சமூகத்தின் பிரச்சினைகள்  குறித்து விவாதிக்கலாம்.
 
இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல் மந்திரி பிரனாயி விஜயனை சந்தித்தார். அப்போது அவர்  நிருபர்களிடம் அரசியல் கற்றுக்கொள்வதற்காக சந்தித்தாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்தித்து பேசினார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்திருந்தார்.
 
ஏற்கனவே கமல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், பிற மாநில முதல்வர்களை சந்தித்து கமல் ஆதரவு  திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.