1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanjavur students suffered from corona cases hype 100

தஞ்சாவூரில் 100 மாணவர்களுக்கு கொரோனா! – 2.75 மாணவர்களுக்கு சோதனை செய்ய உத்தரவு!

Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஆலத்தூர் பள்ளி, மேக்ஸ்வெல் பள்ளி, கிறிஸ்தவ பெண்கள் பள்ளி, கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை என 5 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பள்ளிகளுக்கும் 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 439 பள்ளிகளில் பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பிரச்சாரத்திற்கு போன இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாட்டு! – அமைச்சரின் ஜெயக்குமார் புகைப்படம் வைரல்!