வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (08:45 IST)

சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணப்பட்டுவாடா! – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணப்பட்டுவாடா செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் பஷீர் தொகுதி மக்களுக்கு ரூ.500 வழங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.