1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thangatamil Selvan vote in torch light

கட் ஆனது கரண்ட்.. டார்ச் லைட்டோடு வாக்களித்த தங்க தமிழ்செல்வன்..

தங்க தமிழ்ச்செல்வன்
3 மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.

இன்று ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நிலையில் தேனி மாவட்டம் நாராயண தேவன்பட்டியில் வாக்கப்பதிவு நடைபெற்றபோது 3 மணி நேரம் மின்சாரம் தடை பட்டது.

இதனிடையே திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வாக்களிக்க வந்தார். அப்போது கொள்கை அங்கே ஓட்டுச்சீட்டில் இருந்த சின்னம் மின் தடையால் கண்டுபிடிக்கமுடியாத அளவில்இருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்க தமிழ்செல்வன் வாக்களித்தார். மின் தடையால் 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு மந்தமான நிலையில் நடந்தது.
About Writer
Arun Prasath