1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thangam thennarasu talked about cement price

சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

தங்கம் தென்னரசு
அதிகரித்துக் கொண்டே செல்லும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிமெண்ட் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இது சம்மந்தமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டொர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சருடன் ஆலோசித்து இது சம்மந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.