காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா! எந்த படம் தெரியுமா?
தொடர் தோல்விகளால் நிறைந்திருந்த விக்ரம்மின் சினிமா கேரியருக்கு ஆறுதலாக அமைந்த திரைப்படம் இருமுகன்.
விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இருமுகன் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய பாராட்டுகளைப் பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர் ஜேமி பாக்ஸ் நடிப்பில் உருவான பவர் பிராஜெக்ட் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த படம் இருமுகனின் தழுவல் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்தபடத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது காஜல் அகர்வால்தானாம். ஆனால் அப்போது அவரால் தேதிகள் ஒதுக்கப்பட முடியாத சூழலால் அவர் வெளியேற நயன்தாரா ஒப்பந்தம் ஆனாராம்.