திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (16:37 IST)

செயற்கை விலையேற்றமா? சந்தேகிக்கும் மக்கள்... தீர்க்க சொல்லி கேட்கும் ஓபிஎஸ்

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோரிக்கை.

 
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாயில் இருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இது குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்கள் பதுக்கப்பட்டு செயற்கை விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என மக்கள் நினைக்கிறார்கள். இதனை அரசு சரிசெய்ய வேண்டும் என கோரியுள்ளார். 
 
முன்னதாக, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.