1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanga Tamilselvan guess here after ADMK make confusions

இனிமேல்தான் தர்ம யுத்தம் தொடங்க போகுது! – ஆரூடம் சொல்லும் தங்க தமிழ்செல்வன்!

Tamilnadu
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனிதான் அதிமுகவில் மோதல் தொடங்க போகிறது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவருடனும் திடீர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் “அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை இனிதான் தொடங்க போகிறது. இனி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் வேலை பார்க்க தொடங்குவார்கள்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஈ.பி.எஸ் இருந்தால் என்ன? ஓ.பி.எஸ் இருந்தால் என்ன? திருநாவுகரசர் கிண்டல்!