திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (12:43 IST)

வேட்புமனுவை மறந்துவிட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன்! கடைசி நாளில் பரபரப்பு..!

TAMILSELVAN
தேனி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்ற நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்

அந்த வகையில் தேனி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது அவர் கலெக்டர் அலுவலகம் வந்த பின்னர் தான் வேட்புமனு வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது தெரிய வந்தது

இதனை அடுத்து உடனடியாக உதவியாளர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வேட்புமனுவை வீட்டில் இருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியில் திடீரென தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனுவை மறந்துவிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva