ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (10:15 IST)

களைகட்டும் தேர்தல் திருவிழா.. நேற்று ஒரே நாளில் 350 வேட்பு மனுக்கள் தாக்கல்!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.



இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 20ம் தேதியே தொடங்கியது. ஆனால் பல கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி, வேட்பாளர் அறிவிப்பில் காலதாமதம் செய்ததால் முதல் சில நாட்கள் குறைவாகவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பல முக்கிய வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஓ பன்னீர்செல்வம், கதிர் ஆனந்த், இயக்குனர் தங்கர்பச்சான், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல் முருகன், அண்ணாமலை என பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று ஒருநாளில் மட்டும் 350 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மாலை வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதனால் இன்று மற்றும் நாளை மேலும் பலர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K