வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (07:37 IST)

தங்க தமிழ்ச்செல்வன் தோல்வி அடைந்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்.. பி. மூர்த்தி ஆவேசம்!

தேனி தொகுதி திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடும் நிலையில் அவர் தோல்வி அடைந்தால் நான் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடும் நிலையில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்த நிலையில் அமைச்சர் மூர்த்தியும் ஆவேசமாக பிரச்சாரம் செய்தார்.

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வெல்லாவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் கூறியதோடு தங்கத்தமிழ்செல்வனை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கழகத் தொண்டர்கள் அயராது பாடுபட்டு அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் தேனி

Edited by Siva