வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (11:35 IST)

ரூ.500 கோடி வாங்கிவிட்டு தான் முதல்வர் பதவியை விட்டு கொடுத்தாரா ஓபிஎஸ்?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என கடந்த சில மாதங்களாக அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார் என்பதை என்பது தெரிந்ததே 
 
எனவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியில் பேரங்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது திமுகவில் சமீபத்தில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் அதிமுகவில் முதல்வர் பதவி வேட்பாளரை விட்டு கொடுப்பதற்காக ரூபாய் 500 கோடி ஓபிஎஸ் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே மகனுக்கு மந்திரி பதவி, வழிகாட்டு குழுவில் தன்னுடைய ஆதரவாளர்கள் என பல்வேறு நிபந்தனைகளை விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தைகளில் துணை முதல்வர் ஓபிஎஸ் விதித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது 500 கோடி ரூபாய் வாங்கிவிட்டுத்தான் முதல்வர் பதவி வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் பார்க்கவேண்டும்