காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா நிர்வாகி?

jothimani
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா நிர்வாகி?
siva| Last Updated: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:28 IST)
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை அதிமுக அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் அடிக்க பாய்ந்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிட்கோ அமையவுள்ள இடத்தை பார்வையிட கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வருகை தந்திருந்தார். அப்போது அங்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனும் வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில்பெண் எம்.பி. என்றும் பாராமல் தோள்களை திமிறிக்கொண்டு அடிப்பது போல் அதிமுக நிர்வாகி மலர்மன்னன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் ஆர்.கோம்பை கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்து மக்கள் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :