திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:41 IST)

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி - செங்கோட்டையன்!

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறார்கள் என செங்கோட்டையன் பெருமிதம். 
 
திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே எழுந்த அரசியல் பிரச்சனைகளால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இந்நிலையில் அதிமுக தனது 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. 
 
இந்நிலையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். அதிமுகவை துவங்கி 49 ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவுக்கு பின்பு ஜெயலலிதா தனது ஆட்சியில் இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். 
 
அதே போல் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது. முதல்வர் , துணை முதல்வர் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறார்கள் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.