செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (12:05 IST)

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது வயதானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.