தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருது..
இந்தியாவின் சிறந்த இளம் எம்.எல்.ஏ.வுக்கான விருதை தமிமும் அன்சாரி பெற்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவர் தமிமும் அன்சாரி. இவர் மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் அக்கட்சி கூட்டணி வைத்தது.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் பூனே அமைதி பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த இளம் எம்.எல்.ஏ.க்கான விருது, தமிமுன் அன்சாரிக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் வழங்கப்பட்டது.