வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (16:11 IST)

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அரசியலை விட்டு விலகத் தயார்; ஸ்டாலினுக்கு சவால் விடும் பாஜக தலைவர்

சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என முக ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால் விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என பல மாதங்களாக எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.