1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (14:55 IST)

சுவர் கட்டும் கல்லில் வீடு கட்டியிருக்கலாம்! – சீமான் அறிவுரை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் அரசு செய்து வரும் பணிகள் குறித்து விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக 24ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தையும் அவர் பார்வையிட இருக்கிறார். அவரை வரவேற்க ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. 22 கிலோ மீட்டருக்கு ஒரு லட்சம் பேர் வரிசையாக நின்று அதிபர் ட்ரம்பை வரவேற்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் ட்ரம்ப் வரும்போது அப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகள் தெரியாமல் இருக்க 7 அடி உயரத்திற்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசின் இந்த சுவர் எழுப்பும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது நாட்டில் உள்ள ஏழ்மையை மறைப்பதுதான். அந்த சுவர் எழுப்ப பயன்படுத்தும் செங்கலில் அந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அறிவுப்பூர்வமாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.