மூத்தவர் இருக்கையில் இளையவருக்கு பட்டாபிஷேகமா? டிவிஸ்ட் வைக்கும் தம்பிதுரை
முன்னாள் முதலவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், திமுக தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகினார் ஸ்டாலின். பொருளாளர் பதவியை துரைமுருகன் கைப்பற்றினார்.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதர்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது. திறமையின் அடிப்படையில் இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
தம்பிதுரை இவ்வாறு கூறியிருக்க, ஸ்டாலினை எதிர்த்து வந்த அழகிரி இன்று திடீரென, திமுகவில் மீண்டும் இணைய நான் விரும்புகிறேன். எனவே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டுத்தான் ஆக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.