திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2025 (16:56 IST)

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

Rahul Gandhi
அமெரிக்க அதிபராக சமீபத்தில் டிரம்ப் பதவியேற்ற போது, இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
 
இந்த விழாவிற்கு பிரதமர் மோடி எதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"இந்தியாவில் வலுவான அமைப்பு இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், பிரதமரை அழைக்க அமெரிக்க அதிபர் விரும்பியிருப்பார். இந்தியாவில் உற்பத்தித் துறை வலுவாக இல்லை என்பதால் தொழில் பங்கு குறைவாக உள்ளது. அந்த தொழில்நுட்பங்களில் நாம் பணியாற்றியிருந்தால், இந்நேரம் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு நேரடியாக வந்து, பிரதமரை அழைத்திருப்பார். எங்களுடைய பிரதமருக்கு அழைப்பு விடுங்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சரை நாம் பலமுறை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது," என்று கூறினார் ராகுல் காந்தி.
 
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். "எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமற்ற ஒரு அறிக்கையை வெளியிடக்கூடாது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியது. டிரம்ப் விழாவுக்கு பிரதமரின் அழைப்பு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை," என்றும், "ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, "உங்கள் மன அமைதியை குறைத்ததற்காக மட்டும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று ராகுல் காந்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran