1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ISRO's 100th Rocket Successfully Launched After Initial Setback

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

இஸ்ரோ
இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் செயல்படாமல் இருந்த நிலையில், விஞ்ஞானிகள் போராடி அதை செயல்பட வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஜிஎஸ்எல்வி எப் 15 என்ற ராக்கெட் கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஏவப்பட்டது. இஸ்ரோ தயாரித்த நூறாவது ராக்கெட் என்ற பெருமை இந்த ராக்கெட்டுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ராக்கெட்டில் என்.வி.எஸ் 02 என்ற செயற்கைக்கோள் . இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்ட நிலையில்,  புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்   அதன் சுற்றுவட்ட பாதைகளில் உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இன்று காலை கூறிய நிலையில், தற்போது புவி வட்ட பாதையில் இருந்து மற்றொரு புவிவட்ட பாதைக்கு செல்வதில் சிக்கல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. மாற்று வழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட பாதை சுற்றுப்பாதையை அடைந்துள்ளது என்றும், செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!