திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2025 (17:35 IST)

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

jaya bachan

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதாகவும், இதனால் இறந்தவர்களின் கணக்கு குறைவாக காட்டப்பட்டுள்ளதாகவும் ஜெயா பச்சன் MP கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி மௌனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேசம் மாநில அரசு தெரிவித்தது. மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உத்தரப் பிரதேசம் மாநில அரசு மறைத்து வருவதாக ஏற்கனவே அகிலேஷ் யாதவ் குற்றம் காட்டி இருந்தார். இந்த நிலையில், இது குறித்து  எம்பி ஜெயா பச்சன் கூறிய போது, கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பல உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது என்றும், இதனால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

கும்பமேளாவுக்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என்றும், கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினார் என பொய் சொல்கிறார்கள் என்றும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் எப்படி சிறிய இடத்தில் கூட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறிக்கொண்டார்.

Edited by Siva