தற்போதைய சூழலில் விஷால் அரசியல் எடுபடுமா?

Last Modified வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (07:41 IST)
நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒருசில ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெறுவது என்பது விஷாலுக்கு எளிதான காரியமாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் என்பது ஒரு பெரிய கடல். இங்கு முதலைகளும் முதலாளிகளும் இருப்பதால் கரன்ஸிகள் தாராளமாக நடமாடும். இந்த அரசியலை விஷாலால் சமாளிக்க முடியுமா?

ஒரு பக்கம் புத்துணர்ச்சியுடன் திமுக தலைவராகி இருக்கும் ஸ்டாலின், இன்னொரு பக்கம் இரட்டை இலை என்ற வலிமையான சின்னத்துடன் கூடிய அதிமுக, மெல்ல மெல்ல வளர்ந்து வரும் பாஜக, கரன்ஸியால் வெற்றியை தீர்மானிக்கும் தினகரன் ஆகிய கட்சிகள் அரசியல் களத்தில் உள்ளன. இது போதாதென்று திரையுலக சீனியர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கியுள்ளனர். இவ்வளவையும் சமாளித்து விஷால் அரசியல் செய்வது என்பது சாதாரணமா?


மேலும் நடிகர் சங்க தலைவர் பதவியேற்று சங்கத்துக்கு என சொந்த கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் விஷால் குதிப்பது சரியான முடிவா? என்ற கேள்வியும் நடிகர் சங்க நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. விஷால் கூட்டணி வைத்தோ அல்லது வைக்காமலோ இருந்தாலும் அதிகபட்சம் அவர் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த நிலையில் என்ன நினைப்பில் அரசியலுக்கு வந்துள்ளார்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :