வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (15:30 IST)

ஆட்சிக்கும் பாதிப்பு இல்லை.. மக்களுக்கும் பாதிப்பு இல்லை: தம்பிதுரை!

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லவுள்ளது.
 
சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தினகரன் கட்சி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதைப்பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது.
 
இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். இப்போது வந்திருக்கும் தீர்ப்பால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பதால் மக்களுக்கும் பாதிப்பில்லை. இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் செய்து கொண்டிருப்பார்கள், அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார்.