ஏற்ற இறக்கத்துடன் பிஎஸ்என்எல் ஆஃபர்: 300 ஜிபி 150 நாட்களுக்கு...
பிஎஸ்என்எல் நிறுவனம் ரம்ஜானை முன்னிட்டு தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்ற சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்திருந்தது.
அதன்படி ஈத் முபாரக் எஸ்டிவி 786 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 150 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்த சலுகைகயின் மூலம் 300 ஜிபி டேட்டா, 15,000 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை கிடைக்கப்பெரும். இந்த சலுகையை ஜூன் 26 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் வழங்கி இதே சலுகையில், தினமும் 3 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்பட்டது. வாய்ஸ் கால் பேலன்ஸ் வழங்கப்பட்டது, ஆனால் எஸ்எம்எஸ் சேவை வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சலுகை சில ஏற்ற இறங்களுடன் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டேட்டா அதிகரிக்கப்பட்டு, வேலிடிட்டி குறைப்பட்டது. இந்த ஆண்டு டேட்டா குறைக்கப்பட்டு வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.