அத்துமீறி துப்பாக்கிச்சூடு: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!
இஸ்லாமியா்களின் புனித நாளான ஈகை திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஒவ்வொரு பண்டிகை தினத்தின் போதும் இந்திய ராணுவ வீரா்கள், பாகிஸ்தான் ராணுவ வீரா்களுடன் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ரமலான் தினத்திலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா ரமலான் பண்டிகையின் போது இனிப்பு பரிமாறிக்கொள்ளப்படவில்லை. ஆம், தொடா் அத்து மீறல், ஜம்மு-காஷ்மீரில் தொடா் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இனிப்பு பரிமாறும் நிகழ்வு நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்ட பின்னரும், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என வன்முறையில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.