புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (08:08 IST)

முதல் பட நாயகியை திருமணம் செய்த அறிமுக இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்வது புதியது அல்ல. பாக்யராஜ், பாலுமகேந்திரா முதல் பல இயக்குனர்கள் தங்கள் படங்களின் நாயகிகளை திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ஒருவர் தான் இயக்கும் முதல் பட நாயகியை, அந்த படம் வெளிவரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார்'
 
த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் அடங்கிய ' ‘பேய் எல்லாம் பாவம்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் தீபக் நாராயணன் இயக்கி வருகிறார். இவர் மலையாளத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு முதல்முறையாக தமிழில் இயக்குனராகியுள்ளார். வித்தியாசமான வளர்ந்து வரும் இந்த பேய்ப்படத்தில் டோனா சங்கர் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். இவர் ஒருசில டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நாயகி டோனா சங்கருக்கும் இயக்குனர் தீபக் நாராயணனுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து இயக்குனர் தீபக் கூறியபோது, 'எங்களது காதலுக்கு இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவித்துள்ளதால் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் ஆனாலும் என்னுடைய படம் மட்டுமின்றி மற்ற படங்களிலும் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடிப்பார் என்று கூறினார். புதுமண தம்பதிகளான தீபக்-டோராவுக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.