புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (18:02 IST)

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்தவிடாமல் செய்ய சதி: தம்பிதுரை

திமுக கூட்டணிக்கட்சியின் தோல்வி பயம் காரணமாக தேர்தலை நடத்தவிடக்கூடது என்பது தான் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் குறிக்கோள் இதேபோன்று தான் அரவக்குறிச்சியில் வண்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலை நிறுத்தினார். அதே போன்று இந்த தேர்தலையும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்தவிடாமல் செய்ய சதிதிட்டம் தீட்டுகிறார் என்று கரூர் பாராளுமனற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறினார்.


திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக நேற்று கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கப்பநாயக்கன்பட்டியில் செந்தில்பாலாஜி வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் பெரியசாமி என்ற இரு வாலிபர்கள் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆரத்தியா என கோஷங்களை எழுப்பினர். இதனை கண்டு ஆத்திரமடைந்த மாஜி அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை அழைத்து சம்பவ இடத்திலேயே அந்த இரு வாலிபர்களையும் தாக்க உத்தரவிட்டார். உடனே திமுக வினை சேர்ந்த குண்டர்கள் கோஷமிட்ட வாலிபர்களை கொலை வெறியுடன் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் முன்னிலையில் தாக்கினர்.இந்த தாக்குதலில்   நிலைகுழைந்த வாலிபர்களை காவல்துறையினர் மீட்டு கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.



இந்நிலையில் இன்று கரூர் பாராளுமனற அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில்குமார் (எ) செந்தில்பாலாஜி தனது அரசியல் லாபத்திற்க்காக எதையும் செய்யகுடியவர். கடந்த அரவக்குறிச்சி சட்டம்னற தேர்தலில் தான் தோற்றுவிடுவோம் என்ற காரணத்திற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர், தற்போது திமுகவிற்க்கு சென்றவுடன் பாராளுமன்ற தேர்தலை கரூரில் நடத்தவிடாமல் தடுப்பதற்க்கு இப்போது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் செந்தில்பாலாஜி மீது காவல்துறை வழக்கு பதியப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கட்சிகள் 40 தொகுதிகளிளும் தோற்பது உறுதி. அதற்க்கு முன் உதாரணம் தான் கரூர் தொகுதி இதகைய செயல்களை திமுகவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் ஆகையால் அவர்கள் இதுபோன்ற கீழ்தரமான சம்பவங்களை நிகழ்துகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க. தேமுதிக . பாஜக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதியில்லும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

சி.ஆனந்தகுமார்