1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thalapathy Vijay Greets on 79th Independence Day

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

விஜய்
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய்  நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அரசியல் கட்சியாக தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், விஜயின் இந்த வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி