புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (09:04 IST)

பள்ளி திறந்து 10 நாள்… புத்தகம் எங்கே !- பெற்றோர்கள் அதிருப்தி !

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் 3,4,5 ஆகிய வகுப்புகளுக்குப் புத்தகங்கள் தரப்படவில்லை எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளித் திறக்கும் அன்றே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால் 10 நாட்கள் ஆகியும் 3,4,5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு இன்னமும் பாடப்புத்தகம் வழங்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கான புத்தகங்களை இன்னும் அச்சடிக்கும் பணியே முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டதால் அதற்கான வடிவம் கடந்தமாதம்தான் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவே இந்த தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.