வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (15:54 IST)

லேப் டாப் கொடுக்காததால் மாணவிகள் முற்றுகை – செங்கோட்டையன் திமிர் பதில் !

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை மாணவிகள் முற்றுகை இட்டனர்.

கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். அப்போது 2017 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் சிலர் அங்கு வந்து அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டு தங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக இன்னமும் லேப்டாப் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மாணவிகளால் முற்றுகையிடப்பட்ட செங்கோட்டையன் ‘ உங்கள் குறைகளைக் கேட்டு நான் நடவடிக்கை எடுக்கிறேன். நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு நல்லது. அப்படி கேட்கவில்லை என்றால் நாங்க பாட்டுக்கு போய்ட்டெ இருப்போம். உங்களுக்கு நல்லது நடக்கணுமா வேணாமா..?’ என மாணவிகளை மிரட்டும் தோரனையில் பேசினார். பின்னர் இன்னும் இரண்டு மாதத்தில் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லி சென்றார்.