வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (17:42 IST)

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளிக்கப்படும்” என கூறியிருக்கிறார்.

நடப்பாண்டிலிருந்து தமிழ்நாடு கல்வி துறையில் பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “தனியார் பள்ளிகளை விட பாட திட்டத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அனைத்து விதமான மாற்றங்களையும் செய்து வருகிறோம். போட்டி தேர்வுகளுக்கு ஏற்றார்போல பாட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளோம். சென்ற வருட அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒப்பிடும்போது இந்த வருடம் 2 லட்சம் மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். நாளை மறுநாள் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்த வாரத்தில் ஒரு முறை பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.