வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஜூலை 2020 (20:10 IST)

கோவையில் 3 கோவில்கள் சேதப்படுத்திய சம்பவம்: ஒருவர் கைது

கந்தசஷ்டி கவசம் குறித்த பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் நேற்று திடீரென கோவையில் 3 கோவில்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் 3 கோயில்களை சேதப்படுத்திய சம்பவத்தில் கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப்பிரச்னையால் மன உளைச்சலில் கஜேந்திரன் இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைதான நபர் எந்தவொரு அமைப்பையோ அல்லது கட்சியையோ சாராதவர் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.
 
கோவை டவுன்ஹால் பகுதியில் 3 கோயில்களை சேதப்படுத்திய கஜேந்திரன் தலைமறைவாக இருந்ததாகவும், இதனையடுத்து அவரை தேடி வந்த தனிப்படையினர் சேலத்தை சேர்ந்த நபரை ஆர்.ஜி.புதூர் பகுதியில் அவர் இருந்ததை கண்டுபிடித்து கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது