வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (18:02 IST)

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்து வேளாண்மை பல்கலை முக்கிய அறிவிப்பு

வேளாண்மை பல்கலை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் 
 
ஏற்கனவே பொறியியல் கல்லூரிகளில் பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டது என்பதும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் வரும் 20ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே நடைபெறும் என்பதும் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமே சரி பார்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை http://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது