திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (17:03 IST)

காதலுக்கு எதிர்ப்பு…காதலி, தந்தையை கத்தியால் குத்திய காதலன் !

கோவை மாவட்டம் எம்.ஆர் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா ( 18 ). இவர் பேரூரில் உள்ள தனியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இப்பகுதியில் வசித்து வருபவர் ரதீஸ் ( 24). இவர் ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து, இருவரது வீட்டாரும் கண்டித்துள்ளனர். அதன்பின் ஐஸ்வர்யா ரதீஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யாவின் வீட்டிற்குச் சென்ற  ரதீஸ், தன்னைக் காதலிக்குமாறு கேட்டுள்ளார்.  இதற்கு மாணவி மறுத்ஹ்டுள்ளார் . உடனே தன்னிடம் இருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை குத்தினார். .அவரது கதறலைக் கேட்டு வந்த ஐஸ்வர்யாவின் தந்தையையும் அவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து  போலீஸார்  வழக்குப் பதிவு செய்து ரதீஸ்குமாரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.