1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (16:41 IST)

வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறதா? மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் அடுத்தகட்ட தளர்வாக வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது
 
ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அதனை செயல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது குறித்து அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை செய்து வருகிறார். வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அதாவது தனிமனித இடைவெளி, வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்தல், வழிபாட்டு தலங்களில் கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த ஆலோசனையை அடுத்து வரும் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது