புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:14 IST)

பீலா ராஜேஷுக்குப் பதில் தலைமை செயலாளர் ஏன் ? இதுதான் காரணமாம்!

தமிழகத்தில் கொரோனா பற்றிய புள்ளி விவரங்களை ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கும் அறிவித்து வந்த பீலா ராஜேஷ் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போது நோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனித்து வந்தார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் ஓரங்கட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அவருக்குப் பதில் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து அவரிடமே பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘சுகாதார துறை செயலர் என்ற வகையில் அவர் துறை சார்ந்த அனைத்து அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. தலைமைச் செயலாளர் என்பதால் அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் நான் கவனித்து வருகிறேன். அவரால் அனைத்துத்துறை சார்ந்த தகவல்களையும் சொல்ல முடியாது என்பதால்  நான் பேட்டியளிக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.