1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (20:34 IST)

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2: உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு!

teachers
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது!  தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 கணினி வழி தேர்வுகள் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்குரிய கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடை குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். 
 
சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனுக்கு ஏற்றுக்கொள்ள மாட்டாது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடை உத்தேச குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் பிப்ரவரி 22 முதல் 25ஆம் தேதிக்குள் இணையதள முகவரியில் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்
 
 
Edited by Mahendran