வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (10:30 IST)

நீட் நுழைவு தேர்வு கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

NEET
நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வு கட்டணங்களுக்கு இதுவரை ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அந்த நுழைவு தேர்வு கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் 49வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த கூட்டத்தில் பென்சில், ஷார்ப்னர், வெல்லம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5% என குறைக்கப்பட்டது. மேலும் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ தேர்வு கட்டணங்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கண்ட தேர்வுகளுக்காக கட்டணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva