1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (12:00 IST)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு: தேர்வுத்துறை தகவல்

exam
பத்தாம் வகுப்பு பொது தேர்வு பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று மாணவ மாணவிகளின் பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று முதல் 25ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் பெயர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
 
Edited by Mahendran