வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (09:14 IST)

பி.எட். சிறப்புக் கல்வி நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு அறிவிப்பு..!

exam
பி எட் சிறப்பு கல்வி கணினி வழி தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பிஎட் சிறப்பு கல்வி சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva