1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (07:25 IST)

புயல் பாதிப்பு எதிரொலி: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

teachers
புயல் பாதிப்பு காரணமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2023 - 24 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் மற்றும் கனமழை காரணமாக இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஒரு வாரம் நீடித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் டிசம்பர் 13ஆம் தேதி வரை இந்த காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.  

கால அவகாசம் கேட்டு பலருக்கு கோரிக்கை வைத்ததை வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும்  டிசம்பர் 14ம் 15ஆம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Edited by Siva