1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (06:26 IST)

புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Vijay
புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுங்கள் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. 
 
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
 
Edited by Siva