1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Teachers protest near Sengottaiyan house

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வீடு திடீர் முற்றுகை: சென்னையில் பரபரப்பு

செங்கோட்டையன்
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எடுக்கும் முடிவுகள் அவ்வப்போது சர்ச்சைக்குரியவைகளாக மாறி வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும் ரஜினி உள்பட ஒருசிலர் கல்வி அமைச்சரின் பணிகளை பாராட்டி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வீட்டை திடீரென ஆசிரியர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பகுதிநேர ஆசிரியர்களாக இருக்கும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுமார் 100 பேர் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
குறையாமல் உயரும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் தெரியுமா?