தொடர்புடைய செய்திகள்
- 35% கல்வி கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலிக்கலாம்!
- 35% கல்வி கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலிக்கலாம்!
- மீண்டும் பள்ளி பொதுத்தேர்வுகள் ரத்தா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
- பள்ளிகள் திறப்பது எப்போது? நாளை அறிவிக்கின்றார் முதல்வர்!
- பள்ளி திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
தனியார் பள்ளி மாணவர்களுக்கு எக்ஸாம் உண்டு: அரசு அறிவிப்பு!
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என அரசு அறிவிப்பு.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்துக் கொண்டே இருந்ததால் இந்த கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து டிசம்பர் மாதம் நடைபெறும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது காலாண்டு தேர்வை அடுத்து அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
