வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (19:49 IST)

’’மாணவர்களுக்கு ஆன்லைனில் அரையாண்டுத் தேர்வு .. ‘’ அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகள் விரும்பினால் தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பது குறைந்திருந்தாலும், இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும்,நோய்த்தொற்று தினமும் ஏற்பட்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், எப்போது பள்ளிகள் திறக்கும் தேர்வு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழாகொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,அரசு  தேர்வுகளைத் தள்ளிவைத்துள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.