செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:13 IST)

சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்.. 17 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்.. 17 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!
சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
 
நேற்று இரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடர்ந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் இருந்த 17 ஆசிரியர்கள் திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மயக்கமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து ஆசிரியர்கள் மயங்கி விழும் நிலையில், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் உறுதிபட கூறியுள்ளது.
 
 
Edited by Mahendran