வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (15:33 IST)

கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு போராட்டம்-144 தடை உத்தரவு!

karnataka
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடாகத்தில் நாளை முழு அடைப்பு  போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ் நாட்டிற்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிர்ப்பு கூறி வாட்டாள்  நாகராஜ் தலைமையில்  வரும் வெள்ளிக்கிழமை கர் நாடகம் மா நிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அம்மா நில விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலைய்ய்ல், நாளை மாண்டியா மற்றும் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதற்கு பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுவதும் 1900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு பாதுகாப்புக்காக  சனிக்கிழமை இரவு 12 மணிவரை 144 தடை உத்தரவை அமல்படுத்த மாநில காவல்துறை ஆணையர் தயானந்த் உத்தரவிட்டுள்ளளார்.