ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (11:20 IST)

9வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்.. கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாகவும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
 
Edited by Mahendran