சமாதிக்கு மட்டும் ரூ.100 கோடி இருக்கும்போது, ஆசிரியர்களுக்கு ஊதியம் தர நிதி இல்லையா! சீமான் கண்டனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சமாதிக்கு மட்டும் 100 கோடி செலவு செய்ய பணம் இருக்கும்போது ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் போராட்டத்தில் கலந்து கொண்ட சில ஆசிரியர்களுக்கு மயக்கம் வந்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு தரப்பில் இருந்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சமாதி கட்டுவதற்கு மட்டும் 100 கோடி பணம் இருக்கும்போது ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பணமில்லையா என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Edited by Siva